Pages

Thursday, April 20, 2017

சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய 'சுப்ரமண்ய புஜங்கம்'
இருபத்தி இரண்டாவது பாடல்

Courtesy: SRI RAMASAMY CHANDRASEKARAN 
  FACE BOOK.

அபயம் கிட்டும்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தல்
प्रणम्यासकृत्पादयोस्ते पतित्वा
प्रसाद्य प्रभो प्रार्थयेऽनेकवारम् ।
न वक्तुं क्षमोऽहं तदानीं कृपाब्धे
न कार्यान्तकाले मनागप्युपेक्षा
ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்
நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா
உயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன்
ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்
அயர்கின்ற அவ்வேளை கைவிட்டி டேலென்
ஐயா உனக்கேகை யடையாகி னேனே.
கருணை மிகுமோர் பெருங் கடலே
கந்தா நின்னைத் தொழுகின்றேன்
அருமைமிகு நின் பொன்னொளி சேர்
அடியில் நானும் விழுகின்றேன்.
எருமைக் காலன் வரும் போதென்
எந்தப் புலனும் பேசாது
அருகே வந்து காத்திட நீ
அசட்டை செய்ய லாகாது.
ஐயா! உன் கால்களிலே
அனுதினமும் நமஸ்கரித்து
மெய்யான பூசையிலே
வேண்டுவது ஏதுமிலை
மெய் வாய் கன் மூக்கு செவி
செயல் ஒடுங்கி போய் விடுங்கால்
மையேனும் பொருட்படுத்தாது
இருந்திட வேண்டாமே !
என் பிரபுவே ஸ்வமினாதா ! பலதடவைகள் பக்தியுடன் நீ மகிழும் வண்ணம் உனக்கு பூஜைகள் செய்து உனது பாத கமலங்களில் வணங்கியிருக்கிறேன். ஆகையால் உன்னிடம் உரிமையோடு ஒரு பிரார்த்தனையை வைக்கிறேன்." கருணைக் கடலான ஸ்கந்த மூர்த்தியே என்னுடைய அந்திம காலத்தில் நான் வாய் திறந்து பேசக்கூட சக்தியில்லாத நிலைக்குச் சென்று விடுவேன். அப்பொழுது என்னைக் கொஞ்சமும் அலட்சியம் செய்துவிட வேன்டாம்" என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் இப்போதே

Tuesday, April 18, 2017

Subramania Bujangam

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம்
ஐயுந்தி மெய்நொந்து பொறியைந்து மோய்ந்தே
அறிவின்றி யுளமஞ்சி யுயிர்மங்குபோதே
நெய்நின்ற வடிவேல செந்தூர யாரே
நினையன்றி எனையஞ்சல் எனுமாவ லாரே.
தயவே காட்டும் தன்மை யனே
தங்கக் குகையில் வாழ்பவனே,
மயங்கி ஐந்து புலன் ஒடுங்கி
வாயில் கபமே கக்கிடவும்
பயந்து நடுங்கிப் பயண மெனப்
பாரை விட்டுப் புறப்படவே
அயர்ந்து கிடக்கும் போதென் முன்
ஆறுமுகா, நீ தோன்றுகவே
அசைவு அடங்கி இசைவு ஒடுங்கி
கபம் மிகுந்து வெளியேற
நசைமிகுந்தும் யம பயத்தால்
நடுநடுங்கி உடல் துடிக்க
விசையும் உயிர் விண்ணேக
மெய்விதிர்க்கும் நேரத்தில்
விரைந்து குகன் என் முன்னே
ஒளி தந்து காத்திடவே
உயுர்ந்த தத்துவங்களை தன்னுள் அடக்கி வைத்திருப்பதால் குகன் என்னும் பெயரைக் கொண்ட சுப்ரமணிய ஸ்வாமியே ! கருணைக் கடலே ! இந்த உலகில் பிறந்து தேக இந்திரியங்களோடு லயித்துப் போய் இறுதியில் அங்கங்களின் அசைவுகள் ஒடுங்கி,கபம் மிகுந்து நுரை மிகுந்து வெளியேற , மரணத்தின் பயம் வந்து உடல் நடு நடுங்கி எனது ஆத்மா உடலில் இருந்து வெளியேரும் தருணத்தில் எந்த விதமான நினைவோ அறிவோ இல்லாமல் இருக்கும் நிலை வரும்போது,என்னைக் காபாற்ற வேறு துணை யாரும் இல்லாத நிலையில் நான் கிடக்கும் போது முருகா நீ ஓளி பிரவாகமாத் தோன்றி என்னைக் காக்க வேண்டும்.

Courtesy: Ramasamy Chandrasekaran Facebook.