Pages

Friday, December 12, 2014

Friday, October 17, 2014

Wednesday, June 25, 2014

என் அப்பனே என் ஐயனே




என் அப்பனே என் ஐயனே

  விளம்பரம் சீக்கிரம் முடிந்து விடும். ஸ்கிப் செய்யவும்.

  வேலவன் வருவான்.

   காத்திருங்கள்.



Sunday, June 22, 2014

எல்லாம் முருகன் எனக்கெல்லாம் முருகன்

*********************************************************************************************************** **************************************************************************************************************** 

எல்லாம் முருகன் எனக்கெல்லாம் முருகன்.
ஆறுபடை வீடு எங்கும் அழகன்  ஆறுமுகன்.
வேலன் குமரன்  ஞானஸ்கந்தன் செந்தூரன்
வேண்டி வரும் பக்தர் வினை யாவும் தீர்ப்பவன்.

பாலன் அவன் ஆண்டியாகி பழனி சென்றவன்
ஞாலத்திற்கு வேதமத்தின் பொருள் சொன்னவன் -
உண்மைப்பொருள் சொன்னவன்.

பாடுவோம்  பாடுவோம் திருப்புகழை.
ஓதுவோம் ஓதுவோம் குகன்  நாமத்தை.

கந்தனையே சிந்தனையில் என்றும் கொள்ளுவோம்.
வந்தனை செய்வோம். வேல் வேல் எனச்சொல்வோம்.


ஆறெழுத்து மந்திரமாம் ஆறுமுகன் பெயர்.
தீரவே நம் வினைகளெல்லாம் தினமும் சொல்லுவோம்
சரவணபவ எனச் சொல்லும் போதிலே
அரவணைப்பான் அவன் அருள் பொழிவான்.

எல்லாம் முருகன் எனக்கெல்லாம் முருகன்.  நான்
எங்கு என்ன செய்தாலும்  நாவில் ஆறுமுகன், என்
நாவில் முருகன்.


Sunday, June 15, 2014

நீ என் குழந்தையடா, முருகா




நீ என் குழந்தையடா – 
உன்னை மடியேந்துதல் என் உரிமையடா… 
முருகா… (நீ என்) 

 தீச்சுடரில் பிறந்தாய் 
தீங்கனியாய் வளர்ந்தாய் 
மாங்கனியால் பழனி 
மாமலையில் அமர்ந்தாய்!
 (நீ என்) 

 உன் முகம் காண்கையிலே 
உள்ளத்தில் ஒரு நேசம்
 திருமுகம் காண்கையிலே 
தோன்றுது தனிப் பாசம்! 

 திருமகள் மருமகனே
 திருப்புகழ் நாயகனே 
அறுமுகத் திருமகனே 
அருகினில் வா குகனே! (நீ என்) 

 கூவி அழைக்கின்றேன்
 குமரா திரு முருகா! 

தாவி எனை அணைக்க 
தக்ஷணமே வருவாய்! 


 தத்தித் தவழ்ந்து வரும் 
தங்கத் திருப் பாதம் எட்டி
 எனை உதைத்தால் 
கிட்டிடுமே மோக்ஷம்! 
(நீ என்) 

 --கவிநயா படத்துக்கு நன்றி: http://knowledgefruit.blogspot.com/2010/12/story-of-subrahmanya-is-found-in.html Posted by கவிநயா at 6/14/2014 09:58:00 AM

Thursday, May 1, 2014

Shanmuha Shanmuha


muruga muruga muruga muruga
thirumaal muruga thirumaal muruga
vadivel azhaka vanna mayil vaasa
vanna mayil vaasa vanthu enai aala vaa
vadivel muruga vel vel muruga
vel vel muruga sakthi vel muruga
gnana vel muruga sakthi vel muruga
aiya muruga arahara muruga
arahara muruga siva siva muruga
siva siva muruga jaya siva muruga.



ஷண்முகா ஷண்முகா
அன்பருக்கு அன்பனான ஐயனே ஷண்முகா
ஆறுபடை வீடுடைய ஆண்டவா ஷண்முகா.

பால் தருவோம் பழம் தருவோம் ஓடி வா ஷண்முகா
பாடிடுவோம் பஜனை செய்வோம் பாங்குடன்வா ஷண்முகா

கால் பிடித்தோம் காத்தருள வா வா ஷண்முகா
வேல் முருகா மால் மருகா சரவணா பவா ஷண்முகா.

பாடி வரும் எங்கள் முன்னே தோன்றிடுவாய் ஷண்முகா
பரமசிவம் பாலகனே பாங்குடனே வா ஷண்முகா

அல்லும் பகலுமே உந்தனையே சிந்தித்தோம்
ஓடு மனம் உந்தனையே நாடச் செய்வாய் ஷண்முகா.


Pattathellaam

Friday, April 25, 2014

வனத் தோகை மயிலே !!

வனத் தோகை மயிலே !!
உன் மேலமர்ந்த
மால் மருகன் முருகன்
புகழ் பாட
வந்திடுவாய் . என் நெஞ்சில்
நின்றிடுவாய். மயிலே..

ஆறாத துயரத்திலே அமிழ்ந்திருந்தேன்.
ஆறு படை வீடு எல்லாம் சுற்றி வந்தேன்.
ஏறாத மலை எல்லாம் ஏறி நின்றேன்.
ஏங்கி நின்றேன் என் முருகன் எங்கு என்றேன் ....வனத் தோகை மயிலே !!

வயலுர் விராலிமலை வலம் வந்தேன்.
வழியிலே மயிலே !! உனைக் கண்டு நின்றேன்.
உன் மேல் அமர்ந்து சென்ற முருகன் அவன்
உலகம் சுற்றியபின் எங்கு சென்றான் ?,,,வனத் தோகை மயிலே !!

சூரனை வதைத்திடவே  செந்தூர் சென்றானோ ?
ஊர் உலகம் சுற்றியபின் பழனி சென்று   அமர்ந்தானோ
வள்ளிதனைக் காணவே வனப் பக்கம் சென்றானோ ?
வேதப்பொருள் சொல்லிடவே வேரகம்  நின்றானோ. '.

..வனத் தோகை மயிலே !!

தனக்கெனவே காத்திருக்கும் தெய்வானை மணமுடிக்க
தாலிச் சரடுடனே பரங்குன்றம் விரைந்தானோ ?
காடு மலை சுற்றியபின்  தணிகை மலை அடைந்தானோ
காவடிகள் கூடச் சென்று கதிர்காமம் கண்டானோ
 வனத் தோகை மயிலே !!

கண்டி செல்கையிலே காணும் வழி எல்லாம்
கண்டிரா கொடுமைகள் கண்டு மனம் நொந்தானோ ?
தனக்கென தேசம் இல்லா தமிழருக்கோர் வாழ்வளிக்க
வேலுடனே வந்து அவன் வழி ஒன்று சொல்வானோ ?
வனத் தோகை மயிலே !!








Sunday, March 23, 2014

வில்லினை

வில்லினை ஒத்த புருவங்கள்