Pages

Saturday, November 30, 2013

அவனி தனிலே பிறந்து....

 

அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து 
அழகு பெறவே நடந்து ...... இளையோனாய்
 
அரு மழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று
 
அதி விதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்



சிவகலைகள் ஆகமங்கள், மிகவு மறை ஓதும் அன்பர் 
திருவடிகளே நினைந்து ...... துதியாமல்
 
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகு கவலையால் உழன்று
 
திரியும் அடியேனை உன்றன் ...... அடிசேராய்



மவுன உபதேச சம்பு, மதி அறுகு வேணி தும்பை 
மணி முடியின் மீதணிந்த ...... மகதேவர்
 
மன மகிழவே அணைந்து, ஒருபுறம் அதாக வந்த

மலைமகள் குமார துங்க ...... வடிவேலா





பவனி வரவே உகந்து, மயிலின் மிசையே திகழ்ந்து 
படி அதிரவே நடந்த ...... கழல்வீரா

பரமபதம் ஆய செந்தில், முருகன் எனவே உகந்து 
பழநிமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே!


படங்கள் எல்லாம் முருகனருளால், முருகனருள் வலையில் இருந்து இரவலாக வாங்கி வந்தவை.

முருகன் அருளால் கண்ணபிரான் அனுமதி தருவாராக.

Saturday, November 9, 2013

இப்படியும் பாடலாமோ ?

திருப்பரங்குன்றத்திலே நீ சிரித்தால் ,,,,

இப்படியும் பாடலாமோ ?


Friday, November 8, 2013

பவனி வந்தான் தேரிலே...

பழனி எனும் ஊரிலே பழனி என்னும் பெயரிலே

பவனி வந்தான் தேரிலே...


Monday, November 4, 2013

கந்தா.. உனைத்தானே..

வெற்றி வேலாயுத பெருமானே 
வெற்றி கிட்டியதே உன்றன் அருளாலே 
..
கந்தா.. உனைத்தானே..
அற்புதமான கந்தன் கவிதை ஒன்று அம்பாள் அடியாள் அவர்கள் வலையிலே 
முருகன் அருளைப் பெற்றிருந்தால் மட்டுமே இது போன்ற கவிதை எழுத மனதில் தோன்றும். 

முருகா.  முருகா.