Pages

Sunday, October 30, 2011

அப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா....கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.



IT WAS MY FORTUNE THAT I GOT THIS BOOK KARTHIKEYAN PAAMALAI PUBLISHED BY
MUMBAI NAGARATHAR PANGUNI UTHIRATH THIRUVIZHA KUZHU, IN 1999 ON THE EVE OF
KANDHAR SHASTI.

WHAT A BEAUTIFUL DEVOTIONAL SONG BY THE GREATEST POET OF TAMIL NADU, KANNADASAN ON LORD MURUGAN !!


மலையினில் அரசமைத்த மன்னன்

அப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா ..வெறும்
ஆண்டியாகிப் பழனிவந்த வேலய்யா...
கற்பனையைத் தாண்டி நிற்கும் கந்தய்யா .. உனைக்
காண்பதற்கு நடந்துவந்தோம் நாமய்யா.

மலையினிலெ அரசமைத்த ம்ன்னனே எங்கள்
மடியினிலே குழந்தையான கந்தனே
தலைஇருக்கும் வரையிலுன்னை வணங்குவோம்
சன்னிதியில் பாடிபாடி மயங்குவோம்.

காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தனம் அங்கு
கந்தனையே எண்ணி வாழ்ந்தனம்
பூவிரித்த பாண்டினாட்டில் வாழ்ந்தனம் உன்
பொன்னடியைக் கண்டுகண்டு மகிழ்ந்தனம்.

ஏறுகிறோம் இறங்குகிறோம் வாழ்வினிலே மயில்
ஏறிவரும் நீயறிவாய் நேரிலே
மாறிவரும் நாகரீக உலகிலே நாங்கள்
மாறவில்லை தெய்வபக்தி நிலையிலே

தண்டபாணி கோவிலின்றி ஊருண்டோ ? உன்னைத்
தண்டனிட்டு வணங்கிடாத பேருண்டோ ?
கொண்டுவிக்கப் போன எங்கள் கொள்கையே உனைக்
கொண்டு வைக்கப் போன கொள்கை யல்லவா !!

செந்திலாளும் பழனியாண்டி முருகவேள் எங்கள்
செட்டி மக்கள் தருமங்காக்க வருகவே
அந்தமிலா அழகுத் தெய்வம் கந்தவேள் உன்
அன்புமக்கள் வாழ்வுகாக்க வருகவே.

ஆண்டுதோறும் ஆண்டுதோறும் வருகிறோம் நீ
ஆண்டு வரும் பழனி நோக்கி வருகிறோம்
வேண்டி வரும் நலங்களெலாம் அருளுவாய் உன்
வீட்டு மக்கள் போல எம்மை ஆளுவாய்.

கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.

இங்கே இருக்கிறது 
கவிஞர் மருதகாசி எழுதிய பாடல் 
கந்தன் புகழ் பாடும் பாடல்.. என்
சிந்தையை கவர்ந்த பாடல் என்
முந்தை வினை களைய ஒரு வழி கண்டேன்.






Soorasamharam,Swamimalai, Tamil Nadu.MPG




A View on Swamimalai Temple
Courtesy: dinamalar.

Saturday, October 29, 2011

Muruga muruga -Bombay jayashree



muruga muruga endraal urugaatho unthan ullam

varuvaay varuvaay endraal ....


Bombay Jayashree pleads with Lord MURUGA.

Sunday, October 23, 2011

Poonguyil.. A song by Kalki Krishnamoorthy.



D.K.pattammal sings in Raag kapi.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஓர் நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்

பொன்முகம் அதனில் புன்னகை பொங‌
இன்னமுதே என்ன இன்மொழி பகன்றொரு
மின்னலைப் போலே மறைந்தான். ... பூங்குயில் கூவும்

பனிமலர் அதனில் புதுமணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டென்.
தேனிசை வினையில் தீஞ்சுவை கண்டேன்.
தனிமையில் இனிமை கண்டேன். ... பூங்குயில் கூவும்

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்.
வள்ளி மணாளன் என்னை மறவான்.
பேரருளாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தில் மெய் மறந்தேன். ,,, பூங்குயில் கூவும்

Tuesday, October 18, 2011

முருகன் துதி



Mrs.Lalitha mittal has composed this song on Lord Muruga. This is in the pattern of KOLARU PATHIGAM. PLEASE CLICK HERE TO MOVE TO HER BLOG FOR READING THE TEXT OF THIS GREAT SONG.

Tuesday, October 11, 2011

kArtikEya kamalEkshaNa



Song: kArtikEya kamalekshaNa shivasutA ...
RAgam: valachi
TALam: Adi
Composer: Dr. Srivatsa
Concert: MArgazhi MahOtsavam 2007

Courtesy: carnaticopia/youtube

Monday, October 10, 2011

ஆறுபடை வீட்டுக் காவடிச் சிந்து!


Courtesy: K R S , MY WEB FRIEND WHO COMPOSES LYRICS ALMOST ON 24 X 7 BASIS.

ஆறுபடை வீட்டுக் காவடிச் சிந்து!

முருகன் அருளினை ஆக்கி - வலைப்
பூவினில் காவடி தூக்கி - நல்ல
அடியார் மனம் மகிழ்வா கிட, ஆசைத் தமிழ்ப் பதிவா கிட
வாராய் அருள் தாராய்!

மன்றத்தில் மாலையைச் சூடி - பரங்
குன்றத்தில் பாவையைக் கூடி - என்றன்
மனமே அதில் மணமே புரி, வனவே டவன் வருவான் அவன்
மயிலே பூங் குயிலே!

செந்திலில் பொங்கிடும் அலைகள் - திருச்
செந்தூர் முருகனின் கலைகள் - கந்த
வேலா னது சூரா திபன், மேலா னதைக் கூறாக் கிய
வீரா அதி தீரா!

பழனி மலைச் சிவ பாலன் - தமிழ்க்
கழனி உழும் வய லாளன் - எங்கள்
சீவனைத் திரு ஆவினன் குடி, மேவிடு மலை மாமகள் மகன்
ஆண்டி அவன் தான்டி!

சாமி மலை எனும் வீடு - பொன்னி
தாவி வரும் வயற் காடு - அங்கே
தப்பா தொரு மறையின் பொருள், அப்பா விடம் செவி ஓதிய
வேதன் சாமீ நாதன்!

வில்லிய மான் மகள் வள்ளி - அவள்
மெல்லிய தேன் இதழ்க் கிள்ளி - மங்கை
கரம் பற்றிடக் கலி கொட்டிட, மணம் உற்றிடச் சினம் விட்டிட
பணிகை திருத் தணிகை!

மாமனின் சோலையின் மீதில் - மட
மங்கையர் காதலை ஓதில் - நாவல்
படுமா மரம் அதன்மீ தினில், சுடுமோ பழம் விடுமோ என
மாலை உதிர் சோலை!

ஆறு படை களில் வீடு - அங்கு
ஆறு முகங் களில் கூடு - அந்தச்
சேவடி மயில் சேவல் கொடி, சேந்தன் தரும் சேல் காவடி
ஆடு சிந்து பாடு!
காவடி யாடு சிந்து பாடு! காவடி யாடு சிந்து பாடு!

வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரகரோகரா!